கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலியல் குற்றச்சாட்டில் இருந்து அவுஸ்திரேலிய நீதிமன்றத்தால் இன்று (28) விடுவிக்கப்பட்ட நிலையில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பரிசீலனை செய்யப்படவுள்ளது.
நீதிமன்றத்திற்கு வெளியே, தனது வாழ்க்கை மீண்டும் இயல்பு நிலைக்கு வந்ததையிட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் திரும்பிச் சென்று கிரிக்கெட் விளையாட காத்திருக்க முடியாது என்றும் கூறியிருந்தார்.
மேலும் தனது பெற்றோர் இல்லாமல் கடந்த பதினொரு மாதங்கள் அவுஸ்திரேலியாவில் இருப்பது மிகவும் கடினமாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.