காலநிலை மாற்றத்தால் பெரிய அளவில் பாதிக்கப்படுவது இளம் சமூகத்தினரே” என சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
நேற்றைய திளம் ஐ.நா அலுவலக முன்றலில் நடைபெற்ற இளைஞர்கள், அமைச்சர்கள் மற்றும் சூழலியல் அதிகாரிகளுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 63 சதவீதமான மக்கள் காலநிலை மாற்றத்தை ‘பூகோளத்தின் அவசரநிலையாக இனம் கண்டுள்ளனர்.
இப்பிராந்தியத்திலுள்ள இளைஞர் யுவதிகளே இதனால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பில் மக்களுக்கு போதிய அளவில் விழிப்புணர்வு இல்லை. இதனால் இளம் தலைமுறையினர் கவலை கொள்கின்றனர்.
ஆசிய பசுபிக் பிராந்தியமானது அதன் சுற்றாடல் பிரச்சினைகளைக் கையாள இளைஞர்களின் பங்களிப்பை அவசியமாகும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.