காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு தமிழக அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும் என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை சட்டப்படியும், அரசியல் அழுத்தத்தோடும் கர்நாடகத்திடமிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றிருக்க வேண்டும் ஆனால், இதுவரையில், அபிவிருத்தி தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல், மத்திய அரசாங்கத்தை காரணம் காட்டி, காலதாமதம் செய்வதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, விவசாயிகள் மீது திராவிட முன்னேற்றக் கழகம் அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும், காவிரி விவகாரத்துக்காக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தையும் உடனடியாக கூட்டி, உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.