”நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 12 மாவட்டங்களைச் சேர்ந்த 30,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்” நாட்டில் பெய்துவரும் கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 7,699 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முக்கியமாக வெள்ளத்தினால் 18,800 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கம்பஹா மாவட்டமே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசமாக இனம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை பலத்த மழை மற்றும் காற்றினால் 628 வீடுகள் சேதமடைந்துள்ளதோடு 109 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.