நாட்டின் 65 நகரங்களில் மாத்திரம் சுமார் 3,000 முதல் 4,000 பிச்சைக்காரர்கள் இருப்பதாக தேசிய சமூக மேம்பாட்டு நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட கணக்கெடுப்பில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் கணக்கிடப்பட்டவர்களின் தரவுகள் விரைவில் சேகரிக்கப்பட்டு அவர்களில் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களின் பற்றிய தகவல்கள் திரட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 மாநகர சபை பிரிவுகள் மற்றும் 41 நகர சபை பிரிவுகளில் நான்கு நாட்களாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.