சீன ஆராய்ச்சிக் கப்பல் இலங்கை துறைமுகங்களுக்கு வர அனுமதிப்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின் பின்னர் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன ஆய்வுக் கப்பல் எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்புக்கு வரும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் இந்த சீனக் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.