சமுர்த்தி வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் அதிக கரிசனையுடன் செயற்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சேமிப்பு,நுகர்வு போன்றவை இருப்பதாகவும்,இவ்வாறு சேமித்த பணத்தில் கோடிக்கணக்கில் பெறப்பட்டு 5000 ரூபா அளவில் கொடுப்பனவு கோவிட் காலத்தில் வழங்கப்பட்டதாகவும்,இதற்காக பெறப்பட்ட பணத்தில் ஒரு பகுதி மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளதாகவும்
மற்றுமொரு தொகுதி வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றக் குழுவில் கலந்து கொண்டு அஸ்வெசும வேலைத்திட்டம் மற்றும் சமுர்த்தி வேலைத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்
சமுர்த்தி வேலைத்திட்டமானது சமூகப் பாதுகாப்பு, மற்றும் மக்கள் நலன் மேம்பாடு ஆகியவற்றைக் கொண்டுள்ளதாகவும்,அது நூறு சதவிகிதம் பொருத்தமானது இல்லை என்றாலும்,1994 இல் இருந்து இப்போது வரை இதில் ஏராளமான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும்,இந்த பணம் அதன் பயனாளிகளுக்கு சொந்தமானது என்றும், இங்குள்ள சமூக பாதுகாப்பு காரணமாக எந்த பயனாளியும் அதை நீக்கிக் கொள்ள விரும்பவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக சமுர்த்தி வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் அதிக கரிசனையுடன் செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.