இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு மத்தியில் மேலும் ஒரு இலங்கைப் பெண் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த ஆயுத மோதல் காரணமாக இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ள அதேநேரம் 2 பேரை காணவில்லை என்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.