எதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான 21,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை இன்று முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்துத் தெரிவிக்கையில்” இந்த விடயம் தொடர்பில் அரசாங்க உர நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, லங்கா உர நிறுவனமும் கொழும்பு வர்த்தக உர நிறுவனமும் விநியோகப் பணிகளை மேற்கொள்ளவுள்ளன. இதன்படி 50 கிலோகிராம் யூரியா உரமூடையொன்று 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. அதுமட்டுமல்லாது நெல் பயிரிடும் ஒவ்வொரு விவசாயிக்கும் உர கொள்வனவுக்காக ஒரு ஹெக்டயருக்கு 15,000 ரூபாயை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது” இவ்வாறு மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.