வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதிப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்றயதினம் வெளியிடப்பட்டதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.