சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் CT ஸ்கான் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது என அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
CT ஸ்கான் இயந்திரம் தொடர்பான நிறுவனத்துடனான சேவை ஒப்பந்தம் கடந்த இரண்டு வருடங்களாக புதுப்பிக்கப்படாமயால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள்,சிறுவர்கள் பெரிதும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சில நாட்களில் இயந்திரத்தினை செயற்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.