இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தீவிரமாகப் போர் இடம்பெற்று வரும் நிலையில், இதுவரை 700-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி பைடனை விமர்சிக்கு வகையில் ”நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால், இஸ்ரேலில் இப்படியான அவலங்கள் நடந்திருக்காது ” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இஸ்ரேலில் குழந்தைகள், இளைஞர்கள் எனப் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நான் ஜனாதிபதியாக இருந்தபோது, வலிமையின் காரணமாக நாம் அமைதியை பெற்றிருந்தோம். தற்போது நமக்கு பலவீனம், சிக்கல், குழப்பம் உள்ளது. நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால், இஸ்ரேலில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அட்டூழியங்கள் ஒருபோதும் நடந்திருக்காது” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.