இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ஜெனிவா நோக்கி இன்று (புதன்கிழமை) பயணமாகவுள்ளார்.
உலக நாடுகளில் உள்ள தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் சர்வதேச தொழிற்சங்க மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அமைச்சர் ஜெனிவா நோக்கி பயணிக்கவுள்ளார்
இதன்போது சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளரையும் ,ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகளையும் சந்தித்து அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.