காசா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் மேற்கொண்ட பயங்கரத் தாக்குதலைத் தொடர்ந்து காசாவுக்கான எரிபொருள், மின்சாரம், தண்ணீர், இணையதளம் என அனைத்து சேவைகளையும் இஸ்ரேல் நிறுத்தியிருந்தது.
இதனால் காசாவில் சுமார் 50,000 கர்ப்பிணிகள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் உணவு மற்றும் குடிநீர் இன்றித் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்கா – இஸ்ரேல் இடையே அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினையடுத்து இஸ்ரேல் பிரதமர் காசாவுக்கு நீர் விநியோகம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளார்.
இதேவேளை, போரினால் காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,300 ஐ தாண்டியுள்ளதாகவும் மொத்தத்தில், 2,329 பலத்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும், இஸ்ரேலில் இதுவரை 1,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.