2023 ரக்பி உலகக் கிண்ண தொடரின் அரையிறுதி போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி நடப்பு சம்பியனான தென்னாபிரிக்கா அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற காலிறுதி போட்டியில், பிரான்ஸை 29க்கு 28 என்ற கணக்கில் வீழ்த்தி அந்த அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இதன்படி எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை தென்னாபிரிக்கா எதிர்கொள்ளவுள்ளது.
இதேநேரம் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் மற்றுமொரு அரையிறுதி போட்டியில் ஆர்ஜன்டீனா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.