நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
அதன்படி ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.