காசாவின் கான் யூனிஸ், ரஃபா மற்றும் டெய்ர் எல்-பலாஹ் ஆகிய இடங்களில் உள்ள மக்கள் குடியிருப்பை நோக்கி இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதில் 70 க்கும் மேற்பட்டோர்கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காசா மீதான இஸ்ரேலின் பதிலடி தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டு 11 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் ஒரே இரவில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7 ஆம், திகதி முதல் இடம்பெறும் இந்த வன்முறை இஸ்ரேலில் குறைந்தது 1,400 பேரும், காஸாவில் 2,800 க்கும் மேற்பட்டவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.