சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ‘மரியா பெர்னாண்டா கார்ஸா‘(Maria Fernanda Garza) நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்தார்.
ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகைதந்துள்ள மரியாவை இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஷனில் அன்டனி பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.
உலகின் 170 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும், சர்வதேச வர்த்தக சம்மேளனமானது உலகின் மிகப்பெரிய மற்றும் பலம் வாய்ந்த அமைப்பென்பதும் குறிப்பிடத்தக்கது.