தலவாக்கலையிலுள்ள விற்பனை நிலையமொன்றில் எதிர்பாராத விதமாக வெளியேறிய நச்சுப் புகை காரணமாக 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலவாக்கலை பிரதேசத்தில் வசிக்கும் 20 மற்றும் 22 வயதுடைய ஊழியர்களே இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது, கடையின் ஜெனரேட்டர் இயக்கப்பட்டதால், ஜெனரேட்டரில் இருந்து வெளியேறிய புகை, நிறுவன ஊழியர்களுக்கு விஷமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.