ஈரானே இஸ்ரேல்- பாலஸ்தீன் இடையே இடம்பெற்று வரும் போருக்குக் காரணம் என இஸ்ரேலைச் சேர்ந்த ஷாரன் ஹெஸ்கல் (Sharren Haskel) என்ற நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகமொன்றுக்கு அவர் அளித்த செவ்வியில் தெரிவித்ததாவது ” பல இஸ்ரேலியர்களை ஹமாஸ் படையினர் கொன்றுள்ளனர். ஹமாஸ் கட்டுப்பாட்டிலிருந்து காஸா பகுதியை முற்றிலுமாக விடுவிக்க வேண்டும். சுதந்திர உலகத்தின் ஜனநாயகத்திற்கும் பயங்கரவாத தீமைக்குக்கும் இடையே நடக்கும் போரை இஸ்ரேல் நடத்தி வருகிறது.
பயங்கரவாதம் எனும் பாம்பின் தலையாக ஈரான் செயல்படுகிறது. அந்த தலையான ஈரானை நாம் வெட்ட வேண்டும். ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் இரு அமைப்புகளுக்கும் ஈரான் நிதியுதவி செய்து வருகிறது. அனைத்து இஸ்ரேலியர்களும் ஒற்றுமையாக உள்ளனர். அனைத்து கட்சியினரும் அரசாங்கத்தின் பக்கம் நிற்கிறோம். பாலஸ்தீன பொதுமக்களும் ஹமாஸ் அமைப்பினரால் துன்பப்படுகின்றனர். அவர்கள் தங்கள் உயிரை காத்து கொள்ள மனித கேடயமாக பொதுமக்களை பயன்படுத்துகின்றனர்” இவ்வாறு ஷாரன் தெரிவித்துள்ளார்.