சுகாதார அமைச்சு மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுகளில் இன்று காலை அவசர மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முற்பகல் இந்த அமைச்சுக்களை புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீரவும், சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ரமேஷ் பத்திரனவிற்கு, அவர் வகித்திருந்த கைத்தொழில் அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக சுகாதார அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கு அவர் வகித்திருந்த நிதி இராஜாங்க அமைச்சுக்கு மேலதிகமாக தோட்டத் தொழில் முயற்சிகள் அமைச்சரவை அல்லாத அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.