இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீது, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சன்ஜய பெரேரா மற்றும் ரோஹன பண்டார தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட, விசாரணைக்குழு இன்று முதன் முறையாக கூடியது.
குறித்த குழுவானது இன்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடி, கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.
இவ்விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்ட பிரதி சபாநாயகர் அஜித் ராஸபக்ஷ, “இந்த தாக்குதல் சம்பவத்தின் பிரதான சாட்சியாளராக இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்தவை நாம் இணங்கண்டுள்ளோம்.
இவரை அடுத்த அமர்வில் அழைப்பிக்க நாம் தீர்மானித்துள்ளோம்.
அத்தோடு, சம்பவத்திற்கு பொறுப்பான இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இராஜாங்க அமைச்சரரையும் விசாரணைக்கு அழைப்பிக்க தீர்மானித்துள்ளோம்.
மேலும், விசாரணைக்குழுவுக்கு இரண்டு பெண் உறுப்பினர்களின் ஒத்துழைப்பை பெறவும் நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்.
நாடாளுமன்றின் கௌவரத்தை பாதுகாக்கும் வகையில் எமது அடுத்தக்கட்ட நடவடிக்கையை முன்னெடுப்போம்.
விசாரணைக்குழுவானது எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி காலை 10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.
குற்றம் இழைத்தவர் மீது நாம் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்வோம்.
அநாகரீகமாக நாடாளுமன்றில் நடந்துக்கொள்ள உறுப்பினர்களுக்கு அதிகாரம் கிடையாது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.