லங்கா சதொச நிறுவனம் மேலும் நான்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
அதற்கிணங்க சம்பா அரிசி, கொண்டைக்கடலை, உளுத்தம் பருப்பு மற்றும் சிவப்பு அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒரு கிலோ சம்பா அரிசியின் விலை 6 ரூபாயினாலும், ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை 6 ரூபாவினாலும், பருப்பு கிலோ ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், சிவப்புஅரிசி கிலோ 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி சம்பா அரிசி கிலோ 222 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை 549 ரூபாய் என்றும் ஒரு கிலோ பருப்பின் விலை 295 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு அரிசி கிலோவின் புதிய விலை 169 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.