நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 150 பாடசாலை மாணவர்கள் வீதி விபத்துகளில் உயிரிழப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து பொலிஸாரின் தரவுகளின்படி, நெடுஞ்சாலைகளில் ஏற்படும் வாகன விபத்துகளில் தினமும் 6 பேர் உயிரிழப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு 4 மணியத்தியாலங்களுக்கும் ஒருவர் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது.
கவனக்குறைவாக வாகனம் செலுத்துவதானாலேயே இந்த விபத்துகள் அதிகம் ஏற்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் தேதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் ஆயிரத்து 800 பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதில் 18 வயதுக்குட்பட்ட 115 சிறுவர்கள் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸாரின் தரவுகள் மேலும் தெரிவிக்கின்றன.