பிரித்தானியாவில் விசா வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட பாகிஸ்தானில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளை வேறு இடத்திற்கு மாற்ற இங்கிலாந்து அரசாங்கம் இன்று நடவடிக்கை எடுக்க உள்ளது.
நவம்பர் முதலாம் திகதி முதல் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தத் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்தது.
இந்நிலையில் பிரித்தானியாவிற்கு செல்லும் முகமாக அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் அல்லது தலிபான்களை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் பாகிஸ்தானில் உள்ளனர்.
இந்நிலையில் அவர்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்காக விமானங்களை வாடகைக்கு எடுக்க பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.