இலங்கையில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த காலி கோட்டையை பார்வையிடுவதற்கு கட்டணம் அறவிட காலி பாரம்பரிய அறக்கட்டளை மற்றும் மத்திய கலாசார நிதியம் என்பன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, காலி கோட்டையை பார்வையிட பிரவேசிக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் 15 அமெரிக்க டொலரும், சிறுவர்களிடம்; 7 அமெரிக்க டொலரும் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்திற்கு பிரதேச வாசிகள் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.