இந்தியாவின் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தமிழ் நாட்டிற்கு 2 நாள் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்திலிருந்து தனி விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்தடைந்த அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திரவுபதி முர்மு தங்கினார். இன்று காலை 9 மணியளவில் முக்கிய பிரமுகர்களை திரவுபதி முர்மு சந்தித்திருந்தார்.
பின்னர், அங்கிருந்து சாலைமார்க்கமாக புறப்பட்டு, ஓஎம்ஆர் சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் காலை 10.15 மணி முதல் 11.15 மணிவரை நடைபெறும் 8-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கயுள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் வழியனுப்பு விழா நடைபெறுகிறது. அதன்பின்னர், நண்பகல் 12.05 மணியளவில் இந்திய விமானப்படையின் தனி விமானம் மூலமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்வு டெல்லிக்குப் புறப்பட்டு செல்கிறார். குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டி, சென்னையில் ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.