பிரான்சில் கைது செய்யப்பட்ட இலங்கையின் பாதாள உலகக் குழு நபரான ‘குடு அஞ்சு‘ என அழைக்கப்படும் சின்ஹாரகே சமிந்த சில்வா, பிரான்ஸ் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குடுஅஞ்சுவின் விடுதலையை பட்டாசு வெடித்து, மது விருந்தினை ஏற்பாடு செய்து கொண்டாடிய கல்கிஸ்ஸை பகுதியைச் சேர்ந்த நால்வரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
தெஹிவளை – கல்கிசை மாநகர சபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வாவின் கொலை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் தேடப்பட்டுவந்த குடு அஞ்சு, கடந்த ஏப்ரல் மாதம் பிரான்சில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.