2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான நாடாளுமன்ற விவாதம் 26 நாட்களுக்கு முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற அலுவல் குழு அறிவித்துள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 13 ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து அன்றயதினம் நண்பகல் வரவு செலவுத் திட்ட உரையை ஆரவுள்ளார்.
இதனை தொடர்ந்து வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் ஏழு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.