லங்கா சதொச நிறுவனம் மேலும் இரண்டு பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
பச்சை பாசிப்பயறு மற்றும் ;கடலை ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, பச்சைப்பயறு கிலோ ஒன்றுக்கு 77 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 998 ரூபாவாகும்.
ஒரு கிலோ கடலையின் விலை 9 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 540 ரூபாயாகும். இலங்கை சதொச முழு பால் மாவின் 400 கிராம் பொதியின் விலை 22 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், இதன்படி அதன் புதிய விலை 948 ரூபாயாகும்.