யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் பார்வை குறைபாடுடைய பொலிஸாருக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு நாளை மறுதினம் காலை 9மணிக்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
லயன்ஸ் கிளப்பின் அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் 400 க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கண்ணாடி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.