தேசிய புலனாய்வு பிரிவுடன் இணைந்து, புதிய சமூக புலனாய்வு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இப்புதிய சமூக புலனாய்வு பிரிவின் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாடசாலைகளில் இடம்பெற்றுவரும் தவறான செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் விதமாகவே இப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாடசாலை மாணவர்களிடையே காணப்படும் போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிக்க முடியும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.