இஸ்ரேல்-ஹமாஸ்க்கு இடையிலான உடனடி போர்நிறுத்தத்திற்கு 18 ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலாப நோக்கற்ற அமைப்புகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் மோதலினால் அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கையில் அதிர்ச்சி அடைவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தன்னார்வ தொண்டு நிறுவன தலைவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கூட்டு அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
UNICEF, UN Women, World Food Program, World Health Organisation மற்றும் Save the Children ஆகியவற்றின் தலைவர்கள் உட்பட, UN மற்றும் NGO தலைவர்கள், கடந்த மாதத்தில் இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களின் கொலைகளை கொடூரமானவை என்று விவரித்துள்ளனர்.
குறைந்தது 9,770 பாலஸ்தீனியர்கள், பெரும்பாலும் பொதுமக்கள், காசா மீது இஸ்ரேல் நடத்திய குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம் தெற்கு இஸ்ரேல் மீது ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400 க்கும் மேற்பட்ட மக்கள், கொல்லப்பட்டனர் என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.