ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரமிலும், சத்தீஸ்கர் மாநிலத்திலும் நாளை தேர்தல் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், மிசோரமில் பகுதியிலுள்ள 40 தொகுதிகளுக்கும் சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள 20 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தேர்தலை முன்னிட்டு மிசோரமில் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும் குறித்த தேர்தலின் முடிவுகளை எதிர்வரும் 30ஆம் திகதி வரை வெளியிடக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளமை குறிப்பிட்த்தக்கது.