மொட்டுக்கட்சியும் ஜனாதிபதியுடன் மோதலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
ஹற்றனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மக்களின் ஆதரவு இல்லாமல் வந்த ஒரு ஜனாதிபதியால் இவ்வளவு செய்ய முடியும் என்றால் மக்களின் ஆதரவோடு ஜனாதிபதி ஒருவர் வந்தால் எவ்வளவோ செய்யலாம்.
இலஞ்சம் வழங்கி மாகாண சபை தேர்தலை பிற்போட்டார்கள் இந்த தேர்தலையும் இலஞ்சம் வழங்கி பிற்போட முயற்சிக்கின்றார்கள். ஆகவே மக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும்.
அடுத்த அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கான நடவடிக்கையை மக்கள் முன்னெடுக்க வேண்டும்.
தற்போது மொட்டு கட்சியும் ஜனாதிபதியுடன் மோதலில் உள்ளதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றது.
ஆகவே இது எதிர்காலத்தில் எவ்வாறு முடிவடையும் என்று கூற முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.