ஒவ்வொரு குழுக்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு ஏற்ப நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க முடியாது என விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்களும் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குபவர்கள் தான். மக்களை சந்திக்கிற விதத்தில் மக்களின் கஸ்டம் எங்களுக்கும் தெரியும்.
வங்குநேராத்து அடைந்த நாட்டிலே நாங்கள் இருக்கின்றோம். இந்தநிலை தற்போது மாற்றமடைந்துக் கொண்டிருக்கின்றது.
ஆனாலும் மக்களின் வாழ்க்கை செலவு குறித்த விடயத்தில் இன்னும் நல்லவொரு நிலைப்பாட்டிற்கு செல்லமுடியவில்லை.
இம்முறை வரவு செலவு திட்டத்தின் பின்னர் எதிர்காலத்தில் வலுவான அடித்தளம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என்று நம்புகின்றோம்.
நாங்கள் நிவாரணம் ஒன்றை பெற்றுக்கொடுப்பதாயின் ஒரு துறையை மாத்திரம் அல்ல ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் குறித்து சிந்திக்க வேண்டும்.
தொழிற்சங்கங்கள் இல்லாத எத்தனையோ தொழிலாளர்கள் இருக்கின்றார்கள். ஆகவே வழங்கும் நிவாரணங்களை பொதுவாக பெற்றுக்கொடுக்கவே நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
ஒவ்வொரு குழுக்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு ஏற்ப நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.