யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கையைச் சேர்ந்த லால் பெரேரா (வயது 61) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும், அவர் கடந்த 3 நாட்களாக அங்கு தங்கியிருந்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்,போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.