இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.
நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளதுடன் பல அனர்த்தங்களும் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை கொழும்பு – பதுளை பிரதான வீதியின் பத்கொட பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக தடைப்பட்டிருந்த வீதிப் பகுதி இன்று காலை திருத்தியமைக்கப்படவுள்ளது.
நேற்று பிற்பகல் அப்பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக பத்கொட பிரதேசத்தின் வீதிப் பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
எவ்வாறாயினும், நிலவும் காலநிலை காரணமாக நேற்றிரவு வீதி திருத்தப் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதால், இன்று காலை இந்தப் பணியை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த திருத்தப்பணிகளின் பின்னர் வீதி போக்குவரத்திற்காக திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.