கடந்த வருடம் விளைச்சலின்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பெரும்போகத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 17,000 ரூபா பெறுமதியான டீசலை வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது” உரம் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 15,000 ரூபா நிவாரணத் தொகை மற்றும் ஹெக்டேர் ஒன்றுக்கு 1 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகைக்கு மேலதிகமாக உரிய நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
அதுமட்டுமல்லாது அடுத்த இரண்டு நாட்களில் ஒவ்வொரு விவசாயிக்கும் தலா 40 லீற்றர் டீசல் வழங்கப்படவுள்ளது ” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.