வர்த்தகம் முதல் மனித உரிமைகள் மற்றும் கொரோனா தொற்று போன்ற பிரச்சனைகளில் பல ஆண்டுகளாக விரிசல் அடைந்த உறவுகளை மறுசீரமைக்க அவுஸ்ரேலியாவும் சீனாவும் தீர்மானித்துள்ளன.
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்ரேலிய பிரதமர் அண்டோனி அல்பனீஸ் சீனாவிற்கு செய்துள்ள நிலையில் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவுஸ்ரேலிய தலைவர் ஒருவர் பெய்ஜிங்கிற்கு மேற்கொண்ட முதல் பயணமாக இது அமைந்துள்ளது.