பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகிப் அல் ஹசன்
, இடது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக எதிர்வரும் உலகக்கிண்ண போட்டியில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அணிக்கு எதிராக நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து டெல்லியில் மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து புனேவில் எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறும் உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பங்களாதேஷ் அணி விளையாடும் இறுதிப் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.