பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்கும் ஒருநாள் முத்தரப்புத் தொடருக்காக, 16 பேர் கொண்ட இலங்கை அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
குசல் மெண்டிஸ் அணியை வழிநடத்துவார்; அதேவேளையில், மருத்துவ அனுமதிக்கு உட்பட்டு பத்தும் நிஸ்ஸங்காவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மருத்துவ ரீதியாகத் தகுதியானவர் என அறிவிக்கப்பட்டால் மட்டுமே பத்தும் நிஸ்ஸங்க அணியுடன் பயணம் செய்வார் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் சுட்டிக்காட்டியுள்ளது.
பாகிஸ்தானில் இலங்கைக்கு எதிரான டி20 தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது.
அணியில் அவிஷ்க பெர்னாண்டோ, கமில் மிஷார, பவன் ரத்நாயக்க, சஹான் ஆராச்சிகே, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே மற்றும் தசுன் ஷனக ஆகியோர் உள்ளனர்.
துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன மற்றும் சச்சிந்து கொலம்பகே ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாகவும், துஷ்மந்த சமீர, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க மற்றும் எஷான் மலிங்க ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாகவும் உள்ளனர்.
இலங்கை அணி: பத்தும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, கமில் மிஷார, குசல் மெண்டீஸ் (தலைவர்), பவன் ரத்நாயக்க, செஹான் ஆராச்சிகே, கமிந்து மெண்டீஸ், ஜனித் லியனகே, தசூன் ஷானக்க, துனித் வெல்லலாகே, மகேஷ் தீக்ஷன, சச்சிந்து கொலம்பகே, துஷ்மந்த சமீர, அஷித பெர்ணான்டோ, டில்சான் மதுசஷ்க மற்றும் எஷான் மலிங்க.














