ஆடி மாசம் வந்தா போதும் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும் , அடுத்த விஷயம் கணவன், மனைவியை பிரித்து வைக்க வேண்டும் என்பது …
இது உண்மையா ? ஆடி மாதத்தில் கணவன் மனைவியை பிரித்து வைப்பது ஏன் என்று தெரியவில்லை என்று கொஞ்ச காலம் போய்விட்டது. பின்னர் ஆடியில் ஒன்று சேர்ந்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும் என்பதால் பிரித்து வைத்தார்கள் என ஒன்றை கண்டுபிடித்தனர். இதை நீங்கள் நம்புவதாக இருந்தால் அதை இதை வாசிப்பதோடு நிறுத்தி விடுங்கள்.
சித்திரை மாதத்தில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பிரசவித்த தாய்க்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே சித்திரை மாதம் குழந்தை பிரசவிப்பதை தள்ளி போடுவதற்காகவே, ஆடியில் கருத்தரிக்காமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.
“ஆடியில சேதி
சொல்லி ஆவணியில்
தேதி வெச்சு சேதி சொன்ன
மன்னவரு தான் எனக்கு சேதி
சொன்ன மன்னவரு தான்” இந்த பாடல் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். இந்த பாடலில் கூறப்பட்டதே உண்மையான கருத்து …
ஆடி மாதத்தில் மழையும் காற்றும் அற்புதமாக இருக்கும் ஆடி பட்டம் தேடி விதை என்பது பழமொழி ஆடி மாதத்தில் உழவு பணிகளை மேற்கொள்கின்றனர்.
திருமணத்திற்கு பணத்தை செலவு செய்வது சிரமமாக இருக்கும் என்ற காரணத்தினாலும் ஆடியில் திருமணங்கள் நடத்துவதில்லை.
ஆடியில சேதி மட்டும் சொல்லிவிட்டு, அடுத்த மாதமான ஆவணியில் பரிசம் போட்டு திருமணம் நடத்துகின்றனர். ஆடி மாதம் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் கலைகட்டும் இறை வழிபாட்டிற்காக இந்த மாதத்திலே ஒதுக்க வேண்டும்.
என்பதற்காகவே ஆடி மாதத்தில் திருமணங்களை நடத்துவதில்லை ஆடி மாதம் தவம் இருந்து அன்னை பார்வதி தனது கணவர் சிவபெருமானை இணைந்தார் இதனை நிறைவு போடும் விதமாகவே ஆடித்தவசு பண்டிகை சிவ ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது.