யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட உக்ரேனின் ஒடேசா அருங்காட்சியகம் மீது ரஷ்யா விமானத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம்(05) இரவு குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள யுனெஸ்கோ ஸ்தாபனம் பாரம்பரிய சின்னங்கள் பாதுகாக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.