இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் ரோஹண பண்டார ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இன்று (09) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் குழுவொன்றை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நியமித்தார்.
குறித்த குழுவானது கடந்த திங்கட்கிழமை இரண்டாவது நாளாக கூடிய போது குறித்த மூன்று உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தின் கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இன்று மூன்றாவது நாளாக குறித்த குழு கூடவுள்ளதாகவும்,இவ்விவகாரம் தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.