ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பெத்லஹேமில் இஸ்ரேலியப் படைகளால் பாலஸ்தீனியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஓக்டோபர் 7ஆம் திகதிக்குப் பிறகு கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 165 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் பொதுமக்கள் குடியிருப்பில் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட ஆறு பேரின் உடல்களை சிவில் பாதுகாப்பு மற்றும் அம்பியூலன்ஸ் குழுவினர் மீட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.