அதிர்ஷ்டம் அடிப்படையிலான இணைய சூதாட்ட விளையாட்டுக்களைத் தடை செய்த தமிழக அரசாங்கத்தின் அரசாணை செல்லுபடியாகும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இணைய சூதாட்டத்திற்கு தடை விதித்து கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஏப்ரல் மாதம் அங்கீகாரம் வழங்கியதை அடுத்து அதற்கு தடை விதித்து தமிழக அரசாங்கம் அரசாணை வெளியிட்டது.
இதை எதிர்த்து இணைய சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்த நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும், திறமைக்கான இணைய விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் ஆகிய விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகள் இரத்து செய்யப்படுவதாகவும் நீதிமரணம் உத்தரவிட்டுள்ளது.