இலங்கை கிரிக்கெட் சபையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட அமைச்சரவை உபகுழுவின் நோக்கம் தேசிய அணியையோ அல்லது நிர்வாகத்தையோ தேர்ந்தெடுப்பது அல்ல என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை தற்செயலாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு தடை விதிக்க முடிவு செய்தால், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.