ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனர்களைப் பாதுகாக்க இஸ்ரேல் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸுடனான போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலியப் படைகளின் கைகளில் 180க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதோடு பிராந்தியத்தில் வன்முறை அதிகரித்துள்ளது.
இஸ்ரேலியப் படைகள் மற்றும் குடியேறியவர்களிடமிருந்து நாளாந்தம் வன்முறைக்கு ஆளாகும் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.