ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 131 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர, அவர்களில் 10 பேர் தற்போது கர்ப்பமடைந்துள்ளதாக தெரிவித்தார்.
செப்டம்பர் மாதத்தில் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அவர்களில் 22 பேர் கர்ப்பம் தரித்ததாகவும் அவர் கூறினார்.